பரவசமடைந்தேன்



‘இளமையிற்கல்’, மாணவர்களுக்கு
‘உங்களுக்கு தேவை பணிவும் பக்தியும்’ என மிக அழகாக சுட்டிக்காட்டியது. ஊட்டும் வயதல்ல; ஆகவே, தானே புரிந்துகொள்ள வேண்டும்.
-ராஜி ராதா, பெங்களூரு.

‘சக்தி வழிபாடு’ - குலம் காக்க, அறியாமை அகல, 13 தேவதைகளின் ஒளியாக, சகல  சித்தியும் கிட்ட, ராகு-கேது-சனி தோஷங்கள் நீங்க, எளிய நடையில், எழிலுடன் அமைந்த கட்டுரைத் தொடர். பக்திச் சுவையால் பரவசம் அடைந்தேன்.
- ஏ.டி.சுந்தரம், வெள்ளோடு.

மனித வாழ்வுக்கு என்றென்றும் உடன் வருவது படிப்பறிவு மட்டுமே. இதனைப் போற்றும் வகையில் கல்வி சிறப்பிதழ் சிறப்பாக வெளியிட்டு இருந்ததை வரவேற்று பாராட்டுகிறேன்.
- ப.மூர்த்தி, பெங்களூர் - 97.

‘கல்வி பக்தி ஸ்பெஷல்’ கண்டோம். கண்கவரும் கலைமகளின் ஓவியங்களுடன், அவளின் அருள் மழையின் பூரணத்திலும் நனைந்தோம். பங்குனி உத்திர வழிபாட்டுப் பெருமையினை
ஆன்மிகமே அறிமுகம் செய்தது. நன்றி.
- கோட்டை உமேஷ்,
கமல்நகர், தோவாளை.

கல்வி வரம் தருகின்ற கோயில் தம்மைக் கனிவாகத் தந்ததுவே ஆன்மிகம்தான்! எல்லா நன்மைகளையே இனிதாய்க் காட்டும் யமாஷ்டகத்தை நல்ல பல ஸ்லோகம் தம்மை எல்லாரும் புரிகின்ற வகையில் தந்தே இனிமையினைக் கூட்டியதே
ஆன்மிகம்தான்! பல்லோரும் பாங்கோடு பயன்

படுத்தப் பாங்காக ஆன்மிகமே வரட்டும், வாழி!
- புலவர் இராம.வேதநாயகம்,
வடபாதிமங்கலம்.

 காரடையான் நோன்பின் முக்கியத்துவத்தை
‘யமாஷ்டகம்’ ஸ்லோகம் மூலமாக வெளியிட்டு உணர்த்தியிருக்கிறீர்கள். அருமை.
- இரா.பிரபாவதி, வேளச்சேரி.

ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெறும் ஆன்மிக வண்ண ஓவியங்கள் கண்ணைப் பறிக்கின்றன.
 முத்தூஸ், தொண்டி.

கல்வி வரம் தரும் கோயில்கள் பட்டியலும் விளக்கமும், கடவுள்கள் படமும், அட்டைப் படமும் ரியலி சூப்பர்! காரடையான் நோன்பு, ஹோலி ஸ்பெஷல் பிரசாதங்களின் செய்முறை விளக்கத்தை படிக்கும்போதே நாக்கில் எச்சில் ஊறியது!
பொ.உமாதேவி, பு.புளியம்பட்டி.

ஆலயப் பணிப் பெண்டிர் கட்டுரை வித்தியாசமானது. பழங்காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து வந்த பழக்கமான கோயில் - தேவதாசிகள் வாழ்வியல் நடைமுறைகளை விளக்கியதுடன்,
தேவனுக்கே அடிமை செய்து பணிகள் ஆற்றிய அக்குலத்தோர், நற்குலத்தோரே என்று கட்டுரையை முடித்தது நிறைவாய் இருந்தது!
- அ.கிருஷ்ணகுமார், பு.புளியம்பட்டி.

கொடி மரத்துக்குள் இத்தனை விஷயங்களா! எத்தனை எத்தனை தகவல்கள்!
- ஆர்.எஸ்.லட்சுமி,
பழங்காநத்தம், மதுரை-3

சமஸ்கிருத ஸ்லோகத்தை அப்படியே தமிழில் எழுதி பல ஸ்லோக புத்தகங்களை இப்போது வெளியிடுகிறார்கள். ஆனால், அந்த ஸ்லோகங்களை எப்படிச் சரியாக உச்சரிப்பது என்பதற்கு திரு விஜயராகவலு தெரிவித்திருக்கும் யோசனை மிகவும் அற்புதமானது. சமஸ்கிருத அல்லது பிற மொழி ஸ்லோகங்களை தமிழில் அச்சிடும் பதிப்பகங்கள் இந்த முறையைப் பின்பற்றினால், அந்தப் புத்தகங்களை வாங்குபவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
- ஸ்ரீநிவாசமூர்த்தி, கோயம்பேடு.