அத்திக்காய் வடை / போண்டா



என்னென்ன தேவை?

அத்திக்காய் - 1 கப்,
உடைத்த உளுந்து - 1/4 கப்,
கடலைப் பருப்பு - 1/2 கப்,
துவரம் பருப்பு - 1/2 கப்,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/2 கப்,
உப்பு - தேவைக்கு,
இஞ்சி-பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - பொரிப்பதற்கு.

எப்படிச் செய்வது? 

அத்திக்காயை அரைவேக்காடு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அதோடு 1/2 மணிநேரம் தனித்தனியே ஊறவைத்த கடலைப் பருப்பு, துவரம் பருப்பைச் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். இந்த விழுதில் 1/2 மணி நேரம் ஊற வைத்த உளுந்து, வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி-பச்சை மிளகாய் விழுது, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து பிசைந்து, வடையாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். போண்டாவாக உருட்டிப் போட்டும் பொரித்தெடுக்கலாம். துவர்ப்பு சுவை உள்ள அத்திக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது ஜீரண உறுப்புகளுக்கு நல்லது.