பீட்ரூட் சப்பாத்தி



என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 1 கப்,
துருவிய பீட்ரூட் - 1 கப்,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் (விழுதாக்கிக் கொள்ளவும்) - 2,
துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்,
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்,
நெய் - சிறிது,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும், பீட்ரூட், கேரட், பச்சை மிளகாய் விழுதை உப்புச் சேர்த்து வதக்கவும். அத்துடன் சோம்பு, சீரகம், மாங்காய் தூள் சேர்த்து பிரட்டவும். ஆறியதும் இக்கலவையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இந்த பீட்ரூட் மசாலாவை கோதுமை மாவில் போட்டு சிறிது சூடான பால் விட்டு பிசையவும். மாவை சப்பாத்தியாக இட்டு, தோசைக்கல் சூடானதும் சுட்டு எடுக்கவும். தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.