காக்ரா



என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 1 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
ஓமம் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
சீரகம் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் அல்லது நெய் - சிறிது.

எப்படிச் செய்வது?

கோதுமை மாவில் எண்ணெய் அல்லது நெய் தவிர, அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நீர் விட்டு கெட்டியாக, நன்றாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய சப்பாத்தியாக இட்டு, தோசைக்கல் சூடானதும் எண்ணெய் விட்டு இந்த மெல்லிய சப்பாத்தியை அதில் போட்டு வேக விடவும். அடுப்பை குறைந்த தணலில் வைத்து வெந்த சப்பாத்தியின் மீது மெல்லிய துணியை சுருட்டி அழுத்தம் கொடுக்கவும். பொன்னிறமாக மாறி, மொறுமொறுப்பாக வரும். 10 நாட்கள் வரை கெடாது. இதற்கு சைட் டிஷ் தேவையில்லை. சாஸ் வேண்டு மெனில் தொட்டுக் கொள்ளலாம்.