மாவடு



என்னென்ன தேவை?

மாவடு - 1/2 கிலோ,
கல் உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
கடுகு - 2 டீஸ்பூன்,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது? 

மாவடுவை நன்றாக அலம்பி, துடைத்து வாயகன்ற பாத்திரத்தில் போட்டு எண்ணெய் விட்டு எல்லா மாவடுக்கள் மீதும் படும்படி கலந்து விடவும். மிக்ஸியில் கடுகு, உப்பு, மஞ்சள் தூள், வெந்தயம், மிளகாய் தூள், பெருங்காயத் தூள் ஆகியவற்றைப் போட்டு ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுக்கவும். 1 கப் நீரை காய்ச்சி ஆறவிடவும். சுத்தமான ஜாடியில் இந்த நீர், மாவடுக்கள், அரைத்த தூள்களை போட்டு குலுக்கி மூடி விடவும். அப்படியே 3-5 நாட்கள் வைக்கவும். நடு நடுவே காலை, மாலை என ஜாடியை குலுக்கி விடவும். மாவடு தோல் சுருங்கி 4ம் நாள் நன்றாக ஊறி இருக்கும். நீண்ட நாட்கள் கெடாது.