சுண்டைக்காய் சூப்



என்னென்ன தேவை?

காம்பு நீக்கிய சுண்டைக்காய் - 1/4 கப்,
வெங்காயத்தாள் (ஃப்ரெஞ்ச் ஆனியன்) - 2,
தக்காளி - 1,
துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்ப் பால் - 1/2 கப்,
உப்பு - தேவைக்கு,
நெய் - சிறிதளவு,
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது? 

வெங்காயத்தாள், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சுண்டைக்காயை நசுக்கிக் கொள்ளவும். குக்கரில் சிறிது நெய்விட்டு காய்ந்ததும் நசுக்கிய சுண்டைக்காய், தக்காளி, வெங்காயத்தாள் போட்டு வதக்கி, சில்லி சாஸ், உப்பு சேர்த்து வதக்கவும். அத்துடன் அரை மணி நேரம் ஊற வைத்த துவரம் பருப்பு சேர்த்து நீர் விட்டு 1 விசில் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மிக்ஸி யில் அனைத்தையும் சேர்த்து அரைத்து வடிகட்டி, தேங்காய்ப் பால் சேர்த்து 1 கொதி வந்ததும் இறக்கி சூடாகப் பரிமாறவும். வேண்டுமெனில் கொத்தமல்லித்தழையை மேலே தூவி தரலாம்.