சுக்கு - மிளகுக் குழம்பு



என்னென்ன தேவை?

உப்பு - தேவைக்கு,
பூண்டு - 15 பல்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
புளி - எலுமிச்சை அளவு.

அரைக்க...

சுக்குத் தூள் - 1 டீஸ்பூன்,
வெந்தயப் பொடி - 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க...

எண்ணெய் - சிறிது, கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளிக்கவும். அதில் பூண்டை வதக்கி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் அரைத்த மசாலா சேர்த்துக் கலக்கி, மிளகாய் தூள் சேர்க்கவும். குறைந்த தணலில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும். இறக்கி வைத்து பரிமாறவும்.