சர்க்கரைவள்ளிக் கிழங்கு துக்கடா



என்னென்ன தேவை?

சர்க்கரைவள்ளிக்கிழங்கு (தோல் சீவி, வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்) - 2,
நெய் - 1/4 கப்,
உப்பு - சிறிது,
எண்ணெய் - தேவைக்கு,
துருவிய வெல்லம் - 1/4 கப்,
கோதுமை மாவு - 1/2 கப்,
மைதா - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

நெய், உப்பைச் சேர்த்து குழைக்கவும். அதனுடன் கோதுமை, மைதாவை சேர்த்து, மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு, துருவிய வெல்லம் போட்டு பிசையவும். கெட்டியாக பிசைந்து அரை இஞ்ச் அளவுக்கு, அதாவது, மொத்த சப்பாத்தியாக இட்டு சிறு சிறு துண்டுகளாக கத்தியால் வெட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.