வாழைப்பூ துவையல்



என்னென்ன தேவை?

ஆய்ந்து சுத்தம் செய்த வாழைப்பூ - 1 கப்,
புளி - சிறிது,
உப்பு - தேவைக்கு,
உளுத்தம் பருப்பு - 1/4 கப்,
காய்ந்த மிளகாய் - 2,
கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
கட்டி பெருங்காயம் - சிறிது,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - சிறிது,
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது? 


கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கட்டி பெருங்காயம், வாழைப்பூ, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். அத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறவைத்து அதனுடன் புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து சிறிது நீர் விட்டு மிக்ஸியில் மைய அரைக்கவும். சுவையான வாழைப்பூ துவையல் ரெடி. சூடான சாதத்தில் எண்ணெய் விட்டு இந்த துவையலைப் போட்டு பிசைந்து சாப்பிடலாம். தோசை, தயிர் சாதத்துக்கு சைட் டிஷ் ஆகவும் தொட்டுக்
கொள்ளலாம்.