பெப்பர் - ஆனியன் மசாலா



என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் - 2 கப்,
உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க...


மிளகு - 1 டீஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
தனியா - 1/2 டீஸ்பூன்,
நெய் அல்லது எண்ணெய் - தேவைக்கேற்ப.

தாளிக்க...


கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 1 டீஸ்பூன்.

அலங்கரிக்க...


பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் அல்லது நெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளிக்கவும். அத்துடன் வெங்காயம், உப்பு சேர்த்து கிளறவும். வறுத்து அரைத்த பொடியை அதில் போட்டுக் கிளறி, கொத்தமல்லி தூவி அலங்கரித்துப் பரிமாறவும். சப்பாத்தி, தோசைக்குள் இந்த பெப்பர் ஆனியன் மசாலாவை வைத்து சுருட்டி சாப்பிடலாம். சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். சாண்ட்விச் மாதிரி பிரெட் நடுவில் வைத்தும் இட்லி மீந்து போனால் அதை இதில் கட் செய்து போட்டும் என மல்டி பர்ப்பஸ் ஆக சாப்பிட லாம். வெரி ஹெல்த்தி டேஸ்டி டிஷ் இது.