கடுகுப் பொடி



என்னென்ன தேவை?

கடுகு - 1/4 கப்,
வெள்ளை உளுந்து - 1 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
முந்திரி, வேர்க்கடலை - தலா 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை,
கல் உப்பு - தேவைக்கு,
கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அனைத்தையும் வெறும் கடாயில் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடவும்.