உருளை பன்ஸி



என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு - 3,
முழு பச்சைப் பயறு - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
பச்சை மிளகாய் - 5,
இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு,
வாழை இலை - 1,
சர்க்கரை - சிறிது,
அரிந்த வெங்காயம் - 1/4 கப்,
ரஸ்க் தூள் (தேவைப்பட்டால்) - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - சிறிது,
உடைத்த முந்திரி - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். முழு பச்சைப் பயறை குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய விட்டு வெங்காயம், அரிந்த பச்சை மிளகாய், இஞ்சி, உடைத்த முந்திரி சேர்த்து வதக்கவும். அத்துடன் உப்பு சேர்த்து பச்சைப் பயறுடன் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்ததில் மசித்த உருளை, சர்க்கரையை சேர்த்துப் பிசைந்து, சின்ன அடை மாதிரி தட்டவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய விடவும். வாழை இலையில் எண்ணெய் தடவி சின்ன பன்ஸியை (அடை) போட்டு நன்றாக சுட்டு எடுக்கவும். வாழை இலை மணத்துடன் வேகும். திருப்பி போட்டு வாழை இலையை மூடி வேக விடவும். மொறு மொறுப்பு வர வேண்டுமெனில் ரஸ்க் தூள் தூவலாம்.