வாழைக்காய் குணுக்கு



என்னென்ன தேவை?

வேக வைத்து மசித்த வாழைக்காய் - 1 கப்,
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
சிறு சிறு பல்லாக நறுக்கிய தேங்காய் - 1/4 கப்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - சிறிதளவு,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
காய்ந்த மிளகாய் - 3.

எப்படிச் செய்வது?
 

முப்பருப்புடன் மிளகாய் சேர்த்து நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். அதனுடன் அரிந்த வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மசித்த வாழைக்காய், மஞ்சள் தூள் சேர்த்து உப்பு, அரிசி மாவு, நறுக்கிய தேங்காய் சேர்த்துப் பிசைந்து சூடான எண்ணெயில் குணுக்காக பொரித்தெடுக்கவும்.