அவரை மசாலா



என்னென்ன தேவை?

அவரைக்காய் - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
பெரிய வெங்காயம் - 1.

அரைக்க...

தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி - ஒரு பிடி,
சோம்பு - 1 டீஸ்பூன்,
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 2,
பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க...


கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
எண்ணெய் - சிறிதளவு.

எப்படிச் செய்வது? 


அலசி வெட்டிய அவரையை அரை வேக்காடு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அரைக்க கொடுத்ததை அரைத்து அந்த விழுதையும் தாளித்ததுடன் சேர்க்கவும். அத்துடன் வேக வைத்த அவரைக்காய் போட்டு உப்பு,
மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். அவரை மசாலா ரெடி.