கேரட் ஐஸ்க்ரீம்



என்னென்ன தேவை?

கேரட் - 5,
திக்கான பால் - 1 1/2 கப்,
சர்க்கரை - 1/4 அல்லது 1/2 கப்,
பிஸ்தா, பாதாம், முந்திரி - இம்மூன்றும் தேவையான அளவு அல்லது ஏதாவது ஒரு நட்ஸ், ஃபுட் கலர் - சிறிது,
செர்ரி - அலங்கரிக்க,
வெனிலா எசென்ஸ் - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கேரட் தோலை சீவி அரிந்து, வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். ஒரு பானில் இதைப் போட்டு குறைந்த தணலில் வதக்கி பால், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். திக்காக வரும் போது அடுப்பை அணைத்து விடவும். இந்தக் கலவையை பாத்திரத்தில் ஊற்றி குளிர்சாதனப்பெட்டியில் ஃப்ரீஸரில்  வைக்கவும். 1/2 மணி நேரம் கழித்து இதை எடுத்து, மிக்ஸியில் அரைத்து ஃபுட் கலர், எசென்ஸ், நட்ஸ் சேர்க்கவும். இந்தக் கலவையை ஐஸ்க்ரீம் பவுலில் ஊற்றி, திரும்ப ஃப்ரீஸரில் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து செர்ரி பழத்தால் அலங்கரித்துப் பரிமாறவும். சுலபமான ஐஸ்க்ரீம் இது.